நான் கொன்ற பெண் -கன்னடத்தில் ராகவேந்த்ர காசனீசா – தமிழில்: கே.நல்லதம்பி
முழுக்கவே Unreliable narrator சொல்லும் கதைகள் தமிழில் அரிது. நேரடியாகச் சொல்லும் கதைகளிலேயே, விளங்காவிட்டால் என்ன செய்வது என்ற பயத்தில் ஆசிரியர் கதையின் இடையில் விளக்கம் சொல்வதுண்டு. இந்தக் கதையின் Narrator ஒரு மனச்சிதைவு அடைந்தவர்.
பூனைகள் உண்மையில் இல்லை அவை Metaphor ஆகவே முழுதும் வருகின்றன. Lust, possessiveness, Jealous எல்லாமே மிகவும் அடங்கிய Toneல் கதைமுழுக்கச் சொல்லப்படுகின்றன. கதைசொல்லி தான் நம்பவிரும்புவதையே கதையாகச் சொல்வதும், வாசகர்கள் Parallel ஆக ஒரு கதையை உருவாக்கிக் கொள்வதும் ஆங்கிலத்தில் ஏராளமாக வந்திருக்கின்றன.
கன்னடத்தில் இந்த எழுத்தாளரை முதல் முறையாகப் படிக்கிறேன்.நல்லதம்பியின் மொழிபெயர்ப்பு சிறப்பு. கன்னடத்தில் இருந்து வந்த உணர்வே தெரியாது படிக்க முடியும் மொழிநடை.
நிலவுண்ணும் மண் – கனகராஜ் பாலசுப்பிரமணியம்:
பத்து வருடங்களுக்குப் பிறகு துனிசியாவில் மீண்டும் உள்நாட்டுப் போராட்டம் ஆரம்பித்தது. இந்தக்கதை அதன் பின்னணியில் நடக்கிறது.
கணவன் மனைவி இருவரும் ஒரே மதமாக இருந்த போதும், நம்பிக்கைகள், பின்புலம், படிப்பு முதலிய வேறுபாடுகள் இருக்கும் போது, மணவாழ்வை நீட்டிப்பது கடினமானதாக இருப்பதுடன், பெண்களுக்கு இயல்பாக இருக்கும் Survival instinctம் சேரும் கதை. கனகராஜ்ஜின் தமிழின் முதல் சிறுகதை கூட காலச்சுவடிலேயே வந்ததாக நினைவு. கதை நன்றாக வந்துள்ளது.
அத்தாட்சி – ஐ.எல். கராகியேல்
ருமானிய எழுத்தாளர். Symbolism ஆகச் சொல்லப்பட்ட கதை. ஒரு நூற்றாண்டுக்கு முந்தைய கதை, அச்சு இயந்திரம் மனிதர்களின் மூளையை ஆட்டுவிப்பதைச் சொல்கின்றது. இப்போது புத்தகங்களை விட Wikipediaவே அதிகம் ஆட்டுவிக்கிறது.
ஈர்ப்புவிசை- எட்கார் கெரெட் – தமிழில் ஜி.குப்புசாமி:
Edgar Keret இஸ்ரேலிய எழுத்தாளர். சமீபத்தில் குறுங்கதைகளில் தன்னுடைய பாணியை அழுத்தமாகப் பதித்தவர்.
கோவிட் உலகம் முழுவதுமே ஒரு நிம்மதியின்மையை ஏற்படுத்தி இருக்கிறது. அத்துடன் ஒரு Post-traumatic stress சேர்ந்து ஏற்படுத்தும் உணர்வுகளே கதை. மனிதர்கள் எவ்வளவு Self centeredஆக மாறுகிறார்கள். தங்களது துக்கம் தங்களைப் பாதிப்பதில் இருந்து, இப்போது அடுத்தவர்களது மகிழ்ச்சியும் நம்மை துக்கப்படுத்துவதாக முடிகிறது.
- ரோமி ஏன் இறந்தவளுக்காகப் பரிதாபப்படவில்லை?
அவள் தன்னுடைய சந்தோஷத்தைக் குலைப்பதற்காகத் தான் வரும் நேரத்தைத் தேர்ந்தெடுந்திருக்கிறாள் என்று நினைக்கிறாள் ரோமி. இவளைப் பொறுத்த வரை இறந்தவள் Victim அல்ல இவளே.
- ரோமி புதுவீடு வந்தால் மகிழ்ச்சியாக அல்லவா இருக்க வேண்டும்? ஏன் அவளுக்கு Stress?
வாழ்நாள் முழுக்க அடைக்கவிருக்கும் கடனை நினைத்து.
- டேனியலின் எதிர்வினை பற்றி……
முதலில் டேனியல் அந்த நிகழ்வைப் பார்க்கவில்லை. அடுத்தது வந்த மூன்றாம் நாள், இந்த வீடு வேண்டாம் என்றால் நட்டத்தை வாழ்நாள் முழுதும் சுமக்க வேண்டும். ரோமி ஒன்றுமில்லாத விசயத்திற்கு ஏன்இவ்வளவு உணர்ச்சிவசப்படுகிறாள்என்பதே அவனது சிந்தனை.
- Funeralக்குப் போனது சரியான முடிவா?
இல்லை. டேனியல் இறுதிச்சடங்கு அவளை ஆற்றுப்படுத்தி அதே வீட்டில் இருக்க வைக்கும் என்ற நம்பிக்கைக்கு எதிர்மறையாக அங்கே நடந்த விசயங்கள்.
ஆங்கிலத்தில் படித்த உணர்வு அணுவளவும் குறையாது, தமிழுக்குக் கொண்டு வந்திருக்கிறார் குப்புசாமி.