சுயமரியாதை – வண்ணநிலவன்:

எஸ்தர் தொகுப்பை எண்பதுகளின் ஆரம்பத்தில் படித்து பிரமித்தோம். அதே போல் தான் கடல்புரத்தில், ரெய்னீஸ் ஐயர் தெரு நாவல்கள். நாற்பது வருடங்கள் கழித்து வண்ணநிலவனிடம் அதே மொழி இருக்கிறது, கிட்டத்தட்ட அதே கதாபாத்திரங்களை உலவவிட்டிருக்கிறார். அந்தத் தொகுப்பில் எஸ்தர், மிருகம் இரண்டுமே பஞ்சம் பற்றிய கதைகள், ஆனால் என்ன ஒரு Variety!
பழைய வண்ணநிலவனைப் பார்க்க வெகுவாக ஆவல். எப்போது வாய்க்கும் தெரியவில்லை. மற்றபடி இந்தக் கதை பற்றி எதற்கு?

மியாடி- பெருமாள் முருகன்:

சிறார் கதை. hmmmm.

கங்காரு – ஆசி கந்தராஜா:

கங்காருவை உருவகமாகவும் அதன் மேல் ஒரு Obsessionஐயும் வளர்த்துக் கொள்ளும் சிறுவன் ஆஸ்திரேலியாவில் சட்டப்படி கங்காருலைக் கொல்லலாம் என்பதைக் கண்கூடாகக்கண்டு அதிர்ச்சி அடைகிறான். தேசியவிலங்கை ஒரு நாட்டில் கொல்வது நமக்கும் அதிர்ச்சியே. இலங்கையில் இருந்து ஆஸ்திரேலியா பயணமும் பின் ஆஸ்திரேலியாவின் சூழலும் நன்றாக வந்திருக்கின்றன.

பேசும் வகுப்பறை – மு.குலசேகரன்:

இலட்சியவாதிகள் ஆசிரியராக அல்ல, எந்தப் பணியில் இருந்தாலும் அவதியை அனுபவித்தே ஆக வேண்டும். ஆனால் இந்தக் கதையில் இரண்டு மாணவர்களுக்கு வெளிச்சம் காண்பிப்பது போல், சிலருக்கேனும் நன்மையாக முடியக்கூடும்.
இலங்கைப்பெண் கதை, தனித்து நிற்பது போல் இல்லையா?

Leave a comment