மூன்று பயணிகள் – உண்ணி.ஆர்- தமிழில் அரவிந்த் வடசேரி:

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை இரண்டு விதங்களில் Discharge செய்வார்கள். பூரண குணம் அடைந்தால் அல்லது ஒன்றும் செய்வதற்கில்லை என்ற போது. குழந்தைகளை மரணம் நெருங்குவதை அவர்கள் புரிந்து கொள்ளாமல் குதூகலமாக இருப்பதைக் காண்பதைக் காட்டிலும் வேறு என்ன துயரம் உலகில் இருக்கிறது. தச்சனின் மகன் அவசரப்படுவது ஏன்? அம்மா துக்கத்தை விழுங்கி வெளிக்காட்டாது சிரிப்பது எவ்வளவு கொடுமையானது! Simple but a strong story. நல்ல மொழிபெயர்ப்பு. எங்களைப் போல் மலையாளம் வாசிக்கத் தெரியாதவர்களுக்கு அரவிந்த் வழங்க வேண்டிய பரிசுகள் ஏராளமாக இருக்கின்றன.

கூரைப்பூசணி – ரமேஷ் கல்யாண்:

மேலை நாடுகளில் Step Dad rape செய்வது இல்லாமல் இல்லை ஆனால் அது Negligible.
பெரும்பாலான குழந்தைகள் Biological fatherஐவிட Step Dadஇடம் நெருக்கமாக இருப்பதற்குக் காரணம் அங்கே பாலியல் வறட்சி இல்லாதது தான் என்று தோன்றுகிறது. இங்கே பாலியல் வறட்சி (Sexual poverty) பாகுபாடில்லாமல் யாருடன் நெருக்கம் கிடைத்தாலும் உறவுகொள்ளத் துடிக்கிறது. ஆண் துணைக்காக யாருடனேனும் சேர்ந்து வாழத்துடிப்பவர்கள் மகளைப்பற்றி அதிகம் யோசிப்பதில்லை. இது 1974ல் அவள் ஒரு தொடர்கதை படத்திலேயே காட்டப்பட்டு விட்டது. நல்ல கருவை எடுத்திருக்கிறார் ரமேஷ் கல்யாண். ஆனால் முதலில் வாசல் தெளிக்கிறாள் பின் கூடத்தைக் கூட்டுகிறாள். எனில் முதல் அடி எதற்கு? கூடத்தைக் கூட்டும்போது மட்டும் அடி என்றால் கதையின் Depth கூடுமில்லையா? கதை எழுதியபின் பலமுறை படித்துப் பார்க்க வேண்டும்.

இதுவே நிஜம்- மன்னு பண்டாரி- தமிழில் அனுராதா கிருஷ்ணசாமி:

மலர்மஞ்சம் பாலி தான் உடன் நினைவுக்கு வருகிறாள். இது தான் உண்மையான உணர்வு. இதைச் சொல்லத் தான் நாம் வெட்கப்படுகிறோம். இதில் யார் சரி, யார் தவறு என்பது பற்றி வேறுயாரும் கருத்து சொல்ல முடியாது. ஆனால் இது தான் நிதர்சனம். இதை ஆண்கள் பெருமையாக வெளியில் சொல்வதும், பெண்கள் எக்காரணம் கொண்டும் வெளிக்காட்டக்கூடாது என்று பழக்கப்படுத்துவதும் காலங்காலமாக நடந்து வருகிறது. Frailty, thy name is woman என்றால் ஆண் என்னவாம்? நல்ல மொழிபெயர்ப்பு அனுராதா.

தேவர் அனையர் கயவர் – ஆர்த்தி சிவா:

இரண்டு முக்கியமான விசயங்களை இந்தக் கதையில் தொட்டிருக்கிறார் ஆர்த்தி.ஒன்று, பழகியபின் சரிவராது என்று தோன்றினால் விலகிவிடத் தயாராக இருக்க வேண்டும். இவ்வளவு பழகியபின் எப்படி விலகுவது என்று யோசித்தால் காலம் முழுக்க சிறைவாசம். அடுத்தது அடுத்தவர் எப்படி நடந்து கொண்டாலும் நாம் வைத்திருக்கும் பிரியநினைவுகளை அழிக்காமல்இருப்பது. நீ என்னுடன் நன்றாக இருக்கும் வரை நானும் நன்றாக இருப்பேன் என்பது வணிகஒப்பந்தம். விலகுதல் தவிர்க்க இயலாது ஆனால் ஈரத்தைத் துடைக்க வேண்டியதில்லை. நிறைய எடிட் செய்தால் இது ஒரு நல்ல கதை.

https://drive.google.com/file/d/1gojshidfCNINWMtFzS29drVGnKL08YBn/view?usp=sharing

Leave a comment