பெண்களிடம் எது அழகு என்பது நம்முடைய ஒவ்வொரு பருவத்திற்கும் ஏற்ப மாறிவிடுகிறது போலும். மீசை முளைக்காத பருவத்தில், தாவணி அணிந்த பெண்கள் எல்லோரும் அழகு. ஒருவயதே குறைந்தவன், சின்னப்பயல், தம்பி என்று கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் அப்பாவித்தனம் கூடுதல் அழகு.

பின்னர் சிலகாலம் கழித்து Flirt செய்யும் பெண்களை விட மௌனிப்பெண்கள் அழகாக இருந்தார்கள். அதிகம் பழகுபவர்களிடம் இல்லாத அழகு, ஒதுங்கிப் போகிறவர்களிடம் சேர்ந்திருந்ததாகக் கற்பிதம் செய்த காலம் இருந்திருக்கிறது.

வேலைக்குச் சென்று சிறிதுகாலம் ஆனதும்
கற்பூரபுத்தி கொண்ட பெண்கள் அழகாகத் தெரிந்தார்கள். வேலை குறித்த விசயங்களில் மட்டுமல்ல, படித்த நூல்களில் நாம் பார்த்தறியாத கோணத்தைச் சொல்லும் பெண்கள், முகநூலில் முகத்தைக் காட்டாத போதும் அழகாகவே தோன்றியிருக்கிறார்கள்.

நேற்றொரு இலக்கிய விவாதத்தில் நான் என்ன சமாதானம் சொல்லியபோதும்,
” இல்லை நான் உங்களை நம்பமாட்டேன்” என்று உறுதியாகச் சொன்ன பெண்ணின் குரலில் கோபமில்லை, துளி வெறுப்பில்லை ஆனால் அந்த Firmness. அது தான் உண்மையில் அழகா! Beauty is in the eye of the beholder என்பதை முழுதாக உள்வாங்காமலேயே கடந்திருக்கிறேன். என்னைச் சுற்றி எப்போதும் பெண்கள் அழகாகவே இருந்திருக்கிறார்கள். நான் தான் அழகு குறித்த மதிப்பீட்டை அடிக்கடி மாற்றி வந்திருக்கிறேன்.

Leave a comment