சங்கிலி – யுவன் சந்திரசேகர்:

பேருந்துக்குப் பணமில்லாமல் ஆற்றில் பிணம்போல் மிதந்து சென்று வேலைக்குப் போவது, ஞாபகங்களின் கனத்தில் கூன் விழுவது, முனியாண்டிக்கு நேர்ந்து விட்ட காளை, இனி எங்கை பார்க்கப்போறோம்
என்பது போல் யுவன் சந்திரசேகரின் வழக்கமான வரிகளைத் தாண்டிய அர்த்தங்கள், கதையைத் தொடர விடாமல் தொந்தரவு செய்கின்றன.

ஞாபகங்கள் ஒன்றை ஒன்று நான் முந்தி என தள்ளிவிட்டு வருகின்றன. அறுபது வயதில் அசைபோடுகையில், நிறைய செயல்களுக்கு
அர்த்தமில்லாது போகிறது, சிலவற்றுக்குப் புதிய அர்த்தம் தோன்றுகிறது. Nostalgia தான் முழுக்கதையுமே, அதை சுவைபட சொல்லி இருக்கிறார். ஆமாம், இந்துவை ஏன் பார்க்க முயற்சிக்கவில்லை!

நிலத்தில் ஒரு சுருக்கம் – பென் ஓக்ரி- தமிழில் ஜி.குப்புசாமி:

Ben Okri எழுதியிருப்பதால் மையக் கதாபாத்திரம் கருப்பினத்தவர் என்ற சிந்தனை வருவதைத் தவிர்க்க முடியவில்லை. ஆனால் முகமூடி அணிந்ததும் எதிர்வினைகள் மாறுவதால் இது கறுப்பினத்தவரை மட்டும் சொல்லவில்லை. நாமே வீட்டில் அணியும் முகமூடியை அலுவலகத்தில் அணிவதில்லை. இந்தக் கதையை இன்னொரு கோணத்தில் பார்த்தால், உண்மையில் மற்றவர்களது செயலைக் குறித்து நாம் என்ன நினைக்கிறோமோ அதையே அவர்களாக நாம் நினைக்கிறோம். ஏற்கனவே இவனை வேறு யாரேனும் பெண் மதிய உணவுக்கோ, டின்னருக்கோ அழைத்திருக்கக்கூடும், ஆனால் இவன் தன்னைப் பார்த்தும் விலகிப்போவோரை மட்டுமே கவனித்து வந்திருக்கிறான். நல்ல உளவியல் கதை. இந்தக் கதையை மையக் கதாபாத்திரம் தன்மையில் சொல்லி இருந்தால் இன்னும் Effective ஆக இருந்திருக்கும் இல்லையா? சிறப்பான மொழிபெயர்ப்பு, குப்புசாமி நேர்த்தியும், எளிமையும் கலந்து செய்திருக்கிறார்.

அரிச்சுவடியில் காணப்படாத எழுத்து- பியட்ரிஸ் லம்வாகா- தமிழில் ரிஷான் ஷெரீப்:

Female Genital Mutilation பற்றிய கதை. பெற்றோர் சொல்லும் மணமகனை மறுப்பது
அவர்களை அவமானப்படுத்துவது என்ற அதே அலைவரிசையில் ஆப்பிரிக்கப் பெண்கள் இதற்கு ஒத்துக் கொள்கிறார்கள். இந்தியாவிலும் இந்தப் பழக்கம் இருந்திருக்கிறது. இதைச் செய்ய ஒரே காரணம் பெண்களுக்கு பாலுணர்வுத் தூண்டுதல் இருக்கக்கூடாது. மயக்கமருந்து இல்லாது இந்த அறுவை சிகிச்சைகள் நடந்த உண்மை சம்பவங்கள் இருக்கின்றன.
பாதிக்கப்பட்ட பெண்ணின் சோகக்குரலாக மட்டுமில்லாது அவளது காதலையும் சேர்த்து சொல்வதால் கதையின் அழுத்தம் அதிகரிக்கின்றது. Beautiful rransltion by ரிஷான் ஷெரீப்.

Leave a comment