அவர்களிடம் என்னைக் கொல்ல வேண்டாம் என்று சொல்- ஸ்பானிய மூலம் – ஹூவான் ருல்ஃபோ – தமிழில் சித்துராஜ் பொன்ராஜ்:

பஞ்சகாலங்களில் மனிதம் செத்துவிடுவதைப் பற்றிப் பல கதைகள் வந்திருக்கின்றன. இந்தக் கதையின் கரு பழிவாங்குதல். ஒரு கொலையைச் செய்தவன், நாற்பது வருடங்களாகப் பயந்து ஒளிந்து திரிந்தது அதற்கான தண்டனையாக முடியுமா? மனைவி, பொருள் எல்லாவற்றையும் இழந்தது கொலைக்குற்றத்தை சரிக்கட்டி விடுமா?
இரண்டு நாட்கள் சித்திரவதை அனுபவித்து
துடிதுடித்து இறந்த தந்தையின் கொலைக்குப் பழிவாங்க நினைப்பவன் கொலையாளியின் முகத்தைப் பார்க்காததிலும், வலி மற்றும் பயம் தெரியாமல் இருக்க மதுவைக் கொடுங்கள் என்பதிலும் அவனுடைய கதாபாத்திரம் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. கதையின் தலைப்பே மகனை நோக்கி சொல்வது, ஆனால் தந்தை-மகன் உறவு? சித்துராஜின் அருமையான மொழிபெயர்ப்பு
ஸ்பானிய மொழியிலிருந்து நேரடியாக.

சனிக்கிழமை – லட்சுமிஹர்:

இதைக் கதை என்று சொல்வதை விடக் கதாசிரியரின் கதை எழுதும் முயற்சியில் ஏற்படும் மாறுதல்கள் என்று சொல்லலாம். கதை நடுவே, கதாபாத்திரங்கள் எழுத்தாளருடன் பேசுவதாக, எழுத்தாளரே நடுவில் ஒரு கதாபாத்திரமாக வந்து போவதாக எத்தனையோ கதைகள் எழுதப்பட்டு விட்டன. இந்தக்கதையின் கடைசியில் ஒரு டிவிஸ்டு இருக்கும் என்று எதிர்பார்த்து ஏமாந்தேன். ஒருவேளை டிவிஸ்டு இருக்கும் என்று நம்பவைத்து அது இல்லாதது தான் டிவிஸ்டா?

முருகன் டிரம்செட் – தோகை பழனிவேல்:

கிராமத்தின் இழவு வீடுகளில் தப்பாட்டம் ஒரு முக்கியமான விசயம். கதையில் ஒப்பாரியும், ஒப்பாரியின் இடையே ஒவ்வொருவர் அடுத்தவர் ரகசியத்தை அவிழ்த்து விடுவதும், இழவு வீடுகளில் ஆளுக்குஆள் நாட்டாமை செய்வதும் நன்றாக சொல்லப் பட்டிருக்கிறது. வடிவேலு ஒரு சுவாரசியமான கதாபாத்திரம், விகற்பமில்லாதது போல் பெண்களை. கட்டிப்பிடிப்பது! பழனிவேல் இந்தக்கதையையே விரித்து நாவலாக்கலாம்.

எதிர்பார்ப்பு – பா.ஆசைத்தம்பி:

சரியாக 1950ல் இருந்து 1955க்குள் வந்திருக்க வேண்டிய கதை.

சிவப்பு நிற இலைகள் – ஷிசுக்கு:

Victims இருவர் பரஸ்பர ஆறுதலைப் பகிர இவ்வளவு, இரத்தம், பாலியல், வன்முறை தேவையா?

பிரதிக்கு:

மணிகண்டன் 99761 22445
தனி இதழ் ரூ.50.

Leave a comment