ஊழியம் – அண்டனூர் சுரா:

ஊழியம் என்றால் Serviceஆ? நாம் ஊதியம்
வாங்கிக்கொண்டு செய்வதையும் ஊழியம் என்றே சொல்கிறோம். குழந்தைகளைப் பார்க்கும் பெண்கள் தாயாகும் ஆசை கொள்வது இயற்கை. ஆனால் செல்போன் என்னைக் கேட்காமல் வாங்கக்கூடாது என்பது என்ன மனநிலை?

கீவ் – கு.கு. விக்டர் பிரின்ஸ்:

சாய்நிக்கேஸின் உண்மைக்கதையைத் தழுவி எழுதப்பட்ட கதை. இருந்த இடத்தில் செய்தித்தாள்களைப் படித்து உலகக்கதைகளை எல்லாம் சொல்லும் போட்டி வைத்தால் தமிழர்களே வெற்றி பெறுவார்கள்.

பதினான்கு சொற்கள் – பா.ராகவன்:

சின்னக்கோடு பக்கத்தில் பெரியகோடா, இல்லை, இந்தக்கதை உண்மையிலேயே Neatஆக வந்திருக்கிறது. ‘ அசோகமித்திரன் பெண்ணாகப் பிறந்திருந்தால் பேசுவது மாதிரி’ என்பது போல் கதையெங்கும் இயல்பான நகைச்சுவை. புரவியில் முழுதாக மூன்று பக்கங்கள் வரும் கதையை ரெடிமேட் நூடுல்ஸ் செய்வதற்குள் வாசித்து முடிக்க வைக்கும் மொழிநடை. பேச விருப்பமில்லாது, வேலையில் முழுகவனம் செலுத்தும் பெண்கறைப் பார்த்திருக்கிறேன். Beautifully presented story.

திருடனும் போலீசும் – குமாரநந்தன்:

Con man சுலபமாக ஏமாற்றுவதைச் சொல்லிக் கொண்டே போகும் கதை, கடைசியில் சாயம் போனது போல் ஆகிறது.
கதைகளுக்கு நிறைய உழைத்தால் குமாரநந்தனால் நல்ல கதைகள் எழுத முடியும்.

பிரதிக்கு :

வாசகசாலை 99628 14443
தனி இதழ் ரூ.50.

Leave a comment