Maggie அமெரிக்க எழுத்தாளர். IOWA writers workshopலும், Stanford பல்கலையிலும் பட்டம் பெற்றவர். இவரது முதல்நாவல் Seating Arrangements பல விருதுகளை வென்றது. 2021ல் வெளியான இவருடைய இந்த மூன்றாவது நாவல் புக்கர் நீண்ட பட்டியலில் இடம்பெற்ற நாவல்களில் ஒன்று. இந்த ஆண்டு Women Fiction Award இறுதிப் பட்டியலிலும் இடம்பெற்றுள்ளது.

“I thought I would believe I’d seen the world, but there is too much of the world and too little of life. I thought I would believe I’d completed something, but now I doubt anything can be completed.”

அறுநூறு பக்கங்களுக்கும் சற்றே அதிகமாக. இரண்டு வெவ்வேறு காலகட்டங்களில் (இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பம் மற்றும் நிகழ்காலம்)
நகரும் இரண்டு பெண்களின் கதை. Marian சிறு குழந்தையாக இருக்கும் போது, கப்பல் விபத்தில்இருந்து தப்பித்து மாமாவிடம் வளர்ந்தவள். பைலட் ஆகும் ஆசையை வளர்த்து அதை நிறைவேற்றிக் கொண்டவள். Hadley ஹாலிவுட் நடிகை. Marian வரலாறைத் திரைப்படமாக எடுக்கும் போது Marian ஆகவே ஒன்றி நடிப்பவள். இரண்டு பேருமே மாமாவிடம் வளர்ந்தவர்கள் என்பதைத் தாண்டி இருவரது லட்சியங்கள், சுதந்திரமாகச் செயல்படும் விருப்பு, மற்ற குணாதிசயங்கள் மட்டுமன்றி இருவர் வாழ்விலும் ஏற்படும் ஒரு பெரிய பிரச்சனையிலும் கூட ஒற்றுமை இருக்கிறது.
முழுக்கவே கதையை எப்படி சுவாரசியமாக எழுத முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டு இந்த நூல். அறுநூறு பக்கங்கள் என்பதையே மறக்கும் அளவிற்கு ஆர்வமாக வாசிக்கவைக்கும் கதை.

வரலாற்று புனைவு வகையைச் சேர்ந்தது இந்த நாவல். நாவலுக்காக மாதக் கணக்கில் விமானஓட்டிகளுடன் நேரம் செலவழித்து ஆய்வு மேற்கொண்டதாக ஆசிரியர் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அதே போலவே ஹாலிவுட் நடிகையின் வாழ்க்கையும், ஹாலிவுட்டின் பின்னணியும். Montana வில் இருந்து Seattle, Los Angels, Hawali, New Zealand இரண்டாம் உலகப்போர் காலத்திய இங்கிலாந்து என்று கதை உலகம் சுற்றுகிறது. Maggieம் சுற்றி இருக்கிறார். அண்டார்டிகாவிற்கு கப்பலில் சென்றால் நாவலில் அசல்தன்மையைக் கொண்டு வரமுடியாது என்று விமானத்தில் சென்றிருக்கிறார்.

கண்ணெதிரே அநியாயம் நடந்தாலும் அதைத் தட்டிக்கேட்க பயந்து கடப்பவன், மனதுக்குள் ஒரு வீரசாகசம் செய்து, நீதியை நிலைநாட்டியிருப்பான். அடிப்படையில் Risk averse பெண்ணான Maggieன் இரு கதாநாயகிகளுமே வாழ்க்கையில் பெரிய Riskஐ எடுக்கிறார்கள். இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், பெண்கள் வீட்டுவேலைக்கு என்று பரவலாகக் கருதப்பட்ட காலத்தில், தளைகளை உடைத்து வானில் பறந்த பெண்கள் இந்த நாவலுக்கு Inspiration ஆக இருந்திருக்கிறார்கள். தகவலுக்கான ஆய்வு, கள ஆய்வு இவற்றுடன் புனைவைக் கலந்து இந்த Modern epic உருவாக்கப்பட்டிருக்கிறது. Arctic பகுதிக்கு இரண்டுமுறைகளுக்கு மேல் பயணம், Historic Aircraftல் பயணம் உட்பட நாவலுக்காக ஏராளமான ஆய்வுகளும், பயணங்களும் செய்திருக்கிறார்.

“வாழ்க்கை ஓர் வட்டம்போலே முடிந்த இடத்தில் தொடங்காதா” என்ற தமிழ் திரைப்பாடலின் வரிகள் தான் நாவல் தலைப்பின் குறியீடு. வெற்றிகரமான Career என்பதைத் தாண்டி இரு பெண்களுமே குறைகள் கொண்ட கதாபாத்திரங்கள். அதுவே அவர்களை நம்முடன் நெருங்கி உணரவைக்கிறது. Hadley வெறுமனே கதாபாத்திரம் ஏற்று நடிப்பதோடு மட்டுமல்லாமல், Marianன் வாழ்க்கையை முழுதாகப் புரிந்து கொள்ள முயற்சிக்கிறாள்.
ஆனால் யார் தான் யாரைத்தான் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியும்? Graveyardக்கு யாருக்கும் தெரியாது கொண்டு செல்ல இரகசியங்கள் இல்லாதவர் யார்!
தவறாது வாசிக்க வேண்டிய நாவல்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s