நல்ல துப்பாக்கி – அ.முத்துலிங்கம்:

தமிழில் எழுதப்பட்ட கதையில் பாகிஸ்தானியர்கள் வருவதும், நம்மை அவர்கள் எதிரிகள் என்பதும் கனவில் வரும் காட்சிகள் போல் தோற்றமளிக்கின்றன.
பெஷாவர் நகரம் குறித்த அறிமுகம், பஞ்சு வியாபாரம், காபூல் கலவரம் வியாபாரத்தைப் பாதிப்பது என்று செல்லும் கதையில், மற்றொன்று இடையில் புகுந்து இதைக் குறித்து முற்றிலும் மறக்க வைத்துப்பின் கடைசியில் நினைவுபடுத்துகிறது. காஷ்மீர் விடுதலைக்காகப் போராடுவதே வாழ்க்கையின் இலட்சியம் என்று நினைக்கும் பாகிஸ்தானியர் இன்னும் இருக்கிறார்கள். அவரவர்க்கு அவரவர் நியாயங்கள். தற்காலிக வேலை என்றுசொல்லி நான்குவருடங்கள் ஆகியும் மாறுதல் வராதது, துப்பாக்கியை எடுத்தவன் ஒரு நாளும் கீழே வைக்க முடியாதது, சண்டையில் அரை விநாடிகள் வித்தியாசம் கூட உயீரைக் காப்பாற்றுவது, பாச.தைக் கொள்கை வெறி பின்தள்ளுவது என்று பல இடங்களில் முத்துலிங்கம் தெரிகிறார்.

Leave a comment