ஊசித்தட்டான்களும் ஆறாவது விரலும் – வண்ணதாசன்:

ஊசித்தட்டான் எந்த அவசரமுமில்லாமல் ஒரு நீலக்கோட்டை இழுத்து, கடந்தகாலத்தையும் நிகழ்காலத்தையும் இணைக்கிறது. பொருட்கள், இடங்கள் பழைய நினைவுகளைக் கூட்டிவருவது யாருக்குமே தவிர்க்க முடியாதது. பிரேமா மட்டுமல்ல, பெண்களில் பெரும்பாலோர் பழையது எதையும் மறப்பதில்லை. எல்லாமே இருந்தாற்போல் இருந்து மாறும் வாழ்க்கையில் எதைத்தான் நிரந்தரம் என்று சொல்ல முடியும். ஆறாவது விரல் முதலில் பார்க்கையில் அசூயையா என்பது கூட வெளிக்காட்டாமல் அடங்கிக் கிடக்கிறது. சைக்கிளைக் கொடுத்து என்னவாகப் போகிறது. பிரேமாவிற்கு ஒரு Hug.

புற்று – பாவண்ணன்:

புற்று என்பது உடன்பிறந்து கொல்லும் வியாதியும் கூட. சொத்தை அபகரிப்பது என்பது சரி, பையனை எப்படி அடிமை போல் வைத்துக் கொள்ள முடியும்? சோகத்தை அதிகரிக்க Logicஐப் பறிகொடுத்தாற் போல் தோன்றுகிறது.

கொம்பற்றவன் – வி.அமலன் ஸ்டேன்லி:

மூளைவளர்ச்சி குன்றியவர்களுக்கு எது புரியும், எது புரியாது என்றே மற்றவர்களால் தீர்மானிக்க முடியாது. சவுரி இம்முறை ஏன் காணாமல் போனான் என்று அவன் வந்து சொன்னால் தான் தெரியும். அவனது குடும்பசூழல் இந்தக் கதையில் மிக கவனமாக சொல்லப்பட்டிருக்கிறது. விலங்குகளை துரத்துவது நின்றதும், கடவுளை வணங்க ஆரம்பித்ததும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள். இம்முறை அவன் திரும்பி வரப்போவதில்லை.

kanali.in/%e0%ae%95%e0%af%8a%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%ae%e0%ae%b2%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f/

சமிதை – செந்தில் ஜெகன்நாதன்:

செந்தில் வழக்கமாகத் தன்கதைகளில் கொடுக்கும் அழுத்தம் இந்தக் கதையில் மைனஸாகி, சென்டிமென்ட் கதையாகிப் போயிருக்கிறது. வனஜாவிற்கு வரும் போன்கால் அவளுடைய அப்பாவுடையதாகக் கூட இருக்கலாம். எது போன்ற பெண்ணுக்காக இது போன்ற அம்மாவை இழக்கத் தயாராகிறான் என்பதை உணர்த்த செந்தில் நினைத்திருக்க வேண்டும். கனகு கதாபாத்திரம் தானும் குழம்பி நம்மையும் குழப்புகிறது. அம்மா சாகட்டும் என்று விட்டவன், பெண்டாட்டியைக் கூப்பிடக்கூடாது என்று சொல்ல மாட்டான், வனஜா பரிமாற நிம்மதியாகச் சாப்பிட மாட்டான். செந்தில் சிறுகதைகளுக்கு இன்னும் கவனம் செலுத்த வேண்டும்.

இருபத்தாறு ஆண்களும் ஒரு பெண்ணும்- மாக்ஸிம் கார்க்கி – தமிழில் கீதா மதிவாணன் :

யாரோ ஒருவரை Idolize செய்வது உலகின் எல்லாப் பகுதிகளிலும் இருக்கிறது. அவர்களது புனிதப்பிம்பம் கலையாமல் பார்த்துக் கொள்கிறோம். தான்யாவிற்கும் அது தான் நேர்கிறது. அவள் இவர்களை உபயோகப்படுத்திக் கொள்கிறாள். அது புரியாது அவளை தூய்மையின் சின்னமாகக் கற்பனை செய்து கொள்கிறார்கள். கற்பனை கலைகையில் அவளை தூஷணை செய்கிறார்கள். இன்னொரு பக்கத்தில் இருந்து பார்த்தால் முதலாளித்துவம் ஊழியர்களை அடிமைகளாகவே வைத்திருப்பதும், வளரும் ரஷ்யா Western cultureல் மதிமயங்குவதும் சொல்லப்படுகின்றன எனலாம். தெளிவான, நேர்த்தியான மொழிபெயர்ப்பு.

அமானுஷ்ய வீடு – வெர்ஜினியா உல்ப்- தமிழில் கயல்:

Haunted House ஏற்கனவே தமிழில் படித்ததாக நினைவு. கவிதை வரிகளாக விரியும் கதையை, ஒரு கவிஞர் மொழிபெயர்த்தது சிறப்பு. ஒருவகையில் இது Ghost story. ஆவித்தம்பதியர் தாங்கள் விட்டுச் சென்ற சந்தோஷத்தை வீடெங்கும் தேடுவதாகக் கதை. இன்னொரு வகையில் கதைசொல்லி பெண், தனியாக இருக்கிறாள், அவளது Hallucinationஆக ஏன் இருக்கக்கூடாது. கடைசிவரை அவள் ஆவிகளைப் பார்ப்பதில்லை. உல்ப்பின் மொழிநடையும், பிணைப்பு, இழப்பு, தேடல் போன்ற பல்வேறு உணர்வுகளைச் சிறிய கதையில் அழுத்தமாகப் பதிந்திருப்பதும் தனித்திறமை. நல்லதொரு மொழிபெயர்ப்பு.

Leave a comment