சமூக வலைதளங்களில் பலரும் முன்னிறுத்தும் பிம்பம் உண்மையானதல்ல.
அதில் போராளிகளாகத் தோற்றமளிப்பவர்கள் நிஜவாழ்க்கையில் யாரேனும் மிரட்டும் போது, கால்சட்டையை
நனைப்பவர்களாகக்கூட இருக்கலாம். ஐநூறு Likesக்கு மேல் வாங்குபவர்களுக்கு அவ்வப்போது பதிவு போடாமல் இருந்தால் மறந்து போய் விடுவார்களோ என்ற பயம் இருக்கும். அவர்களுக்கும் மேலிருப்பவர்கள் Social media influencers.

Social media influencer ஒருவரின் பதிவுகளுக்குத் தொடர்ந்து Backlash ஆகிறது.
Social Media Manager ஒருவருக்கு வேலை இல்லாமல் போகிறது. முதலாமவர் Ultra rich. இரண்டாமவருக்கு சாப்பிடுவதற்கே பணமில்லை. இருவரும் ஒரே வருடத்தில் ஒரு கல்லூரியில் படித்து சிலகாலம் தோழிகள் போலிருந்தவர்கள். இப்போது ஒருவரின் தேவை மற்றவருக்கு அவசியமாகிறது.

முதலாவது சமூக ஊடகங்களின் இன்றைய நிலை குறித்த விவரணைகள். அடுத்தது நண்பர்களிடம் வேலைக்குப் போனால், அவர்கள் எஜமானர்களா? நண்பர்களா? இல்லை இரண்டுமில்லையா? கடைசியாக இரண்டு பெண்களுக்கிடையேயான உறவு, இரகசியமாய் ஒருவரை ஒருவர் மற்றவரில் இருந்து தன்னை உயர்ந்தவராய்க் காட்டிக் கொள்வது. Tolentino ஒரு கட்டுரையாளர். இது அவரது முதல் புனைவு. முதலாவதே நன்கு கூர்மையாக வந்திருக்கின்றது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s