வைரமணி – அரவிந்த் வடசேரி:

LGBT கதை. ஒரு ஆண் ஒரு பெண்ணை வெறித்தனமாகக் காதலிப்பது போல் ஒரு ஆண் இன்னொரு ஆணைக் காதலிப்பதை பேசுவது நமக்குப்புதிது, ஆனால் பல காலமாக நடந்து கொண்டுதான் இருக்கிறது. இவ்வளவிற்கும் பசித்த மானிடம் வெளிவந்து கிட்டத்தட்ட அரைநூற்றாண்டு ஆகப்போகிறது. மேலைநாடுகளில் LGBT தனியாக ஒரு Genre.அரவிந்த் வடசேரியின் இந்தக் கதை நன்றாக வந்திருக்கிறது. தெளிவான சித்திரம் போல் எந்த பிசிறுமில்லாது வந்திருக்கிறது. இன்னும் கூட அரவிந்த் வார்த்தைகளில் கவனம் செலுத்த வேண்டும். கதையில் ரவி அங்கேயே தான் இருக்கிறான், மாதாந்திர வருகை என்ற வார்த்தை தேவையில்லை.

நஸ்ரியா ஒரு வேஷக்காரி – மு.ஆனந்தன்:

ஆண்கள் பெண்ணுடை அணிந்து பெண்கள் போல் நடையுடை பாவனையை மாற்றுவதும், பெண்கள் அதே போல் ஆண் மாதிரியை கடைபிடிப்பதும் சிலருக்கு நடக்கின்றன. அதனாலேயே அவர்கள் தன் உடலை வெறுக்க ஆரம்பிக்கிறார்கள். புர்காவை கழற்றிவிட்டு வீட்டுக்குப்போகும் போது போட்டு செல்லும் பெண்களையும் பார்த்திருக்கிறோம். ஆனால் ஆண்கள் மட்டுமே பார்க்கும் வேலைக்குத் தான் போவேன் என்று நல்ல வேலையை விட்டுச் செல்வதில் ஒரு நாடக.தன்மை இல்லை?

வினை- அசோக்ராஜ்:

நன்றாக ஆரம்பித்த கதை, பாதிவரை நன்றாக சென்று பின் தானும் குழம்பி நம்மையும் குழப்புகிறது. ஒரு நல்ல செய்தி வந்த உடன் வீட்டிலும் உவேக் என்ற செய்தி வருவதை நம் ஆட்கள் எப்போது நிறுத்த உத்தேசம் செய்திருக்கிறார்கள் தெரியவில்லை. பிருந்தாவிற்கு.கூட ஒரு மகள் பிறக்கப்போகிறாள் என்று சொல்லியிருந்தால் இன்னும் சுபமாக இருந்திருக்கும்.

கோடைமழை – தேவா:

நவீன பாசமலர் என்று சொல்லும் அளவு சென்டிமென்ட். சுகு தெளிவாகிட்டது மிக்க மகிழ்ச்சி.

பாத்துமாவின் கோடாரி – அப்புசிவா:

இயல்பாகச் செல்லும் கதை, எந்த ஆர்ப்பாட்டமுமில்லாது கதை சொல்லல்.
சமூகம் எப்போதுமே தனிநபருக்குரிய நன்றி இல்லாதது. பாத்துமா கதாபாத்திரம் தெளிவாகச் சித்தரிக்கப்பட்டு இருக்கிறது.

https://kalakam.in/2022/01/

Leave a comment