Baldacci அமெரிக்க எழுத்தாளர். அடிப்படையில் வழக்கறிஞர். 1996ல் Absolute Power என்ற நூலை எழுதியதில் இருந்து சீராக இவர் எழுத்துலக வாழ்க்கையில் முன்னேற்றம் தான். இன்று உலகில் அதிக நூல்கள் விற்பனையாகும் எழுத்தாளர்களில் இவரும் ஒருவர்.

இரண்டாம் உலகப்போரில் பங்கேற்ற பின், ஒரு பெண்ணால் ஏமாற்றப்பட்டு மூன்று வருடம் சிறையில் இருந்து விட்டு, நண்பர் ஒருவருடன் சேர்ந்து துப்பறிவாளனாகிய Archer தான் இந்த நாவலிலும் மையக் கதாபாத்திரம். Los Angels சினிமா நகரம். பெரிய ஸ்டுடியோக்களும், பிரபல நட்சத்திரங்களும் இருக்குமிடம். Archer LA வந்தவுடன் தனக்கு கொலைமிரட்டல் இருப்பதாகவும், அதைக் கண்டுபிடிக்குமாறும் ஹாலிவுட் திரைக்கதை ஆசிரியர் ஒருவர் சொல்கிறார். அந்த கேஸ் Archerஐ பல ஹாலிவுட் பிரபலங்களிடமும், மாஃபியா கும்பலிடமும் கொண்டு போய் சேர்க்கிறது. பொய்கள், Betrayals, infedilities, ambitions, அளவுக்கு அதிகமான பணம் என்று பலவும் நிறைந்த மனிதர்கள். பாசாங்கு உலகம் ஒருபுறமும் மாஃபியா உலகம் மறுபுறம் Archerஐக் குறிவைக்க Archerன் ஓட்டமும், நாவலின் ஓட்டமும் அதிகரிக்கிறது.

Baldacci acknowledgementsல் குறைந்தது நூறுபேருக்கு நன்றி சொல்கிறார். அத்தனை பேர் பங்களிப்பு இருப்பதனால் தான் வருடத்திற்கு ஒரு நாவலை Flawless ஆக எழுத முடிகிறது. ஒரு Outline வைத்துக் கொண்டு அதற்குரிய தகவல்கள் சேகரித்து, எல்லோருக்கும் பழகிய மொழிநடையில், Subtle humourஐச் சேர்த்து எழுதப்படும் நாவல்கள் Baldacciன் நாவல்கள். அதனாலேயே எல்லா நாவல்களும் அதே விறுவிறுப்பு.

மாஃபியா வருவதால் மற்ற Archer நாவல்களை விட Adventures அதிகம் இந்த நாவலில். ஒருவரை ஒருவர் Blackmail செய்து கொள்வதும் அதிகம். மாஃபியாவின் தலைவன் ஒருவன் நாவலில் சொல்வான். “திரையில் மிகமிக Toughஆகத் தோன்றும் பலரும் என் முன்னால் வருகையில் பயந்து நடுங்கி Cry babyஆக மாறிவிடுவார்கள்” என்று. அளவற்ற பணமும், புகழும் பல நடிகைகளைப் போதையில் மாட்டிக்கொள்ளச் செய்கிறது. பல அதிக வருமானம் தரும், உயிருக்கு ஆபத்தில்லாத வாய்ப்புகள் இருந்தாலும் உலகை Better place ஆக ஆக்க வேண்டும் என்று பிடிவாதமாக சிலர் சில வேலைகளில் பல சிரமங்களுடன் இருக்கிறார்கள். பணம் மட்டுமன்றி தனிப்பட்ட வாழ்வில் ஏற்படும் இழப்புகளையும் பொருட்படுத்தாமல் தொடர்கிறார்கள். நாம் பாதுகாப்பான வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கும் போது, அந்த பாதுகாப்புக்கு காரணமானவர்கள் அவர்கள் தான் என்பதை நாம் ஒருபோதும் நினைப்பதில்லை.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s