சி.விமலனின் பாலசுப்பிரமணியம் குறித்த கட்டுரை ஒரு Nostalgic பயணம். SPB எல்லோருக்கும் பிடித்த பாடகர். கானா பிரபாவின் பாடகன் சங்கதி என்ற நூலை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட கட்டுரை.
இவர் மனோரமாவுடன் பாடிய பூந்தமல்லியிலே பாடலைப் பலர் மறந்தேவிட்டார்கள் போலிருக்கிறது.

விதி- சரத்விஜேசூரிய- தமிழில் ரிஷான் ஷெரீப்:

சிங்களக்கதைகள் தொடர்ந்து ஆச்சரியமூட்டுகின்றன. ஒரு கடிதத்தில் தான் எல்லாமே தொடங்குகிறது. அதில் ஒரு உண்மை பகிரப்படுகிறது. அந்த உண்மையே ஒரு உறவு முறியக் காரணமாக இருந்திருக்கிறது. விக்ரம் இன்றைய சராசரி ஆண். தான் Virginஆக இல்லையென்றால் பிரச்சனையில்லை ஆனால் தனக்கு மனைவியாக வருபவள் கன்னியாக இருக்க வேண்டும். அதில் ஒன்றும் விசேஷமில்லை. நில்மினியைக் கூர்ந்து பார்த்தால், அவளுக்கு இளமையில் நடந்த பயங்கரம், குடும்ப சூழ்நிலை எல்லாமே சேர்ந்து கொழுகொம்பை இறுகப் பற்றிக் கொள்ள வேண்டும் என்று தோன்றியிருக்கும். பரிதாபப்பட்டு இல்லை தான் மறைமுகமாக குற்றம் இழைத்திருக்கிறோம் என்ற உணர்வோடு செய்யும் மணம் எவ்வளவு நாள் நிலைக்கும்? நில்மினியின் கதாபாத்திரத்தை நுட்பமாகச் சித்தரித்ததே இந்தக் கதையின் வெற்றி. ரிஷானின் அருமையான மொழிபெயர்ப்பு.

மைதிலியின், சோலைக்கிளியின், சப்னாஸ் ஹாசிமின், அபார், நபீல், ரஸ்மி கவிதைகள் எல்லாமே நன்றாக வந்திருக்கின்றன.

நிரூபாவின் சுணைக்கிது சிறுகதைத் தொகுப்பு குறித்த தேவ அபிராவின் விமர்சனம் திருத்தமாக வந்திருக்கிறது.

ஜிஃப்ரி ஹாசனின் றிச்சர்ட் டி சொய்ஸா குறித்த கட்டுரை அவரது பின்னணி மற்றும் படைப்புகள் குறித்த சிறந்த அறிமுகத்தை வழங்குகிறது.

மென் இறக்கைகளின் அரண்- ஈஸ்வரன்:

அனுபவங்கள் கற்றுத்தரும் பாடமே வேறு தான். நம் முன்னால் துப்பாக்கியை நீட்டினால் நாம் செய்யும் எதிர்வினைக்கும், ஈழப்போராட்டத்தின் போது அங்கே இருந்தவர்கள் செய்யும் எதிர்வினைக்கும் நிச்சயமாக வித்தியாசமிருக்கும். தூணில் கட்டி வைத்து சுடப்பட்ட ஒருவனைப் பற்றிய விவரணைகளை இங்குள்ளவர்களால் இந்த அளவிற்கு எழுத முடியுமா தெரியவில்லை. ஆனால் ஈஸ்வரன் சிறுகதை வடிவத்தை இன்னும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது.

மூன்று மாயாஜாலக்காரர்கள்- சுபாஷ் சந்திரன் – தமிழில் ஏ.கே.ரியாஸ் முகம்மத்:

கனவு, மாந்தரீகம், Fanytasy, கதைக்குள் கதை, கடைசியில் டிவிஸ்ட் என்று எல்லாம் சேர்ந்த கதை. மூன்று மணிக்கு மாயாஜாலக்காரன் எழுந்திருப்பதிலும் அங்கே எழுத்தாளன் கதையை அதே நேரத்தில் முடிப்பதிலும் ஒரு தொடர்பு இருக்கிறது. மாயாஜாலக்காரன் ஒருவேளை ஊரில் தங்கியிருந்து எழுத்தாளனிடம் கதையைக் கேட்டிருந்தால் வார்த்தை தவறாது அது அதே கதையாகத் தான் இருந்திருக்கும். Beautifully presented story. இயல்பான மொழிபெயர்ப்பு.

இயல்வாணனின் புத்தக மதிப்புரை, சாந்தனின் சித்தம் சரிதம் நாவல் குறித்து.
விளக்கமான மதிப்புரை. சித்தன் சரிதம் சமீபத்தில் வெளிவந்த நல்ல நூல்களில் ஒன்று.

திருநங்கை விஜயராஜமல்லிகாவின் மொழிபெயர்ப்புக் கவிதைகள் அதிர வைக்கிறது. தமிழில் மொழிபெயர்ப்பு பத்மகுமார் பரமேஸ்வரன்.

ஹேமமாலினி ரமேஷ்ஷின் லதா மங்கேஷ்கர் குறித்த அஞ்சலிக் கட்டுரை பல தெரியாத தகவல்களை உள்ளடக்கியது..

வியூகம் இதழை இலவசமாக வாசிக்க:

http://www.magzter.com/share/mag/25460/937907/1?mg_pf=android_magzter&utm_ID=3402562

Leave a comment