Reading Slump என்ற நோயே இதுவரை எனக்கு இருந்ததில்லை. கடந்த முப்பத்தைந்து வருடங்களாக வாசிக்கும் வேகத்தை விட வாங்கும் வேகம் அதிகரித்ததனால், படிக்காத புத்தகங்களின் எண்ணிக்கை, வருடாவருடம் அதிகரித்து வரும்பொழுது, Reading slump என்பது என்வரையில் Luxury. சிலர் மாதக்கணக்கில், வருடக்கணக்கில் கூட வாசிக்காமல் இருந்ததாகச் சொல்லியிருக்கிறார்கள். பொதுவாகச் சொல்லும் காரணம் வாசிக்கும் மனநிலை இல்லை. என்னைப் பொறுத்தவரையில், குடிகாரனுக்கு சோகத்தைத்தீர்க்க, சந்தோஷத்தைக் கொண்டாட, வெறுமையை விரட்ட என்று பல்வேறு உணர்வுநிலைகளுக்கு, குடியே மருந்து போல, வாசிப்பே எனக்கு எல்லாக் காலகட்டங்களிலும்.

மிகுந்த வேலைப்பளு இருக்கும் நாட்களில் நான் தேர்ந்தெடுப்பது Short novels. ஒருநாளில் இல்லை அதிகபட்சம் இரண்டு நாட்களில், நூலைப்படித்து முடிக்கும் திருப்தியை அளிக்கும். முன்னர் Management மற்றும் Finance சம்பந்தப்பட்ட புத்தகங்களைப் படித்த பிறகு, இப்போதும் கூட Classics போல வாசிக்க எளிதில்லாத நூல்களை முடித்தபிறகு நான் உடனே எடுப்பது திரில்லர் நூல்கள். திரில்லர் படிக்கையில் நான் வேறொருவனாக மாறுவது போல் ஒரு உணர்வு. துன்பம் புகை போல் சூழும் நேரத்தில், இனி மீள்வதற்கில்லை என்ற உணர்வு வரவிடாமல், எப்போதும் புத்தகங்களே தடுத்தாட்கொண்டிருக்கின்றன.

வாசிப்புப் பழக்கம் அம்மாவிடமிருந்து தொற்றிக் கொண்டது. அப்பா நாளிதழ்களைத் தவிர வேறு எதுவும் வாசித்ததேயில்லை. வாசிப்பிற்கும் புத்திசாலித்தனத்திற்கும் எந்தவித சம்பந்தமுமில்லை. வாசிப்பது முழுக்கவே Personal happinessக்காக. கிளாசிக்குகளை வாசிப்பவர், திரில்லர் படிப்பவர்களைக் கேவலமாகப் பார்ப்பது மேற்கத்திய நாடுகளிலும் உண்டு. அமெரிக்காவில் கடந்த வருடத்தில் ஒரு புத்தகத்தையேனும் வாசித்தவர்கள் மொத்த Adult Populationல் 72% என்கிறது Statista புள்ளிவிவரம். இதில் பாதி சதவீதமேனும் இந்தியாவில் அடைவதற்கு எத்தனை வருடங்கள் தேவைப்படும்?

Leave a comment