ஆணும் பெண்ணும் சமமாக இருப்பது என்பது எப்போதும் முடியாததாகிறது. ஆண் நானும் நீயும் சமம் என்றால் பெண் அவனை எளிதாக Dominate செய்ய முடியும் என்று நினைக்கிறாள், இல்லை காலங்காலமாக வந்த மரபின்படி ஆண் பெண்ணைத் தனக்குக் கீழ் என்று நம்புகிறான்.

Adichieன் கதை ஒரு Speculative fiction. ஒரு Alternate worldஐ உருவாக்குகிறது. அங்கே பெண்கள் Presidentஆக Senators ஆக எல்லா உயர் பதவிகளிலும் இருக்கிறார்கள். விதிவிலக்காக ஒரு ஆண் பெட்ரோலியம் அமைச்சராக நியமிக்கப்பட இருந்தால், ஒரு ஆணால் எப்படி அந்த வேலையைத் திறம்பட செய்ய முடியும் என்று கேட்கிறார்கள். Anti abortion lawவிற்குப் பதிலாக Male masturbatory actஐக் கொண்டு வருகிறார்கள். ஆண் சிறந்த கவிஞனாகத் தனித்திறமை வாய்த்திருந்தாலும் பெண் அவனை நீ வீட்டில் குழந்தைகளைப் பார்த்துக் கொண்டால் போதும் என்கிறாள். வெளியில் செல்லும், உயர்பதவியில் இருக்கும் பெண்
இருபது வயது இளைஞர்களின் மேல் காமுற்று அவர்களுடன் உறவு கொள்கிறாள்.

Adichieன் கதை ஒரு Reverse role play. எதுவெல்லாம் விதைக்கப்பட்டதோ அதுவெல்லாம் அறுவடையாகிறது. கதைகளிலேனும்! பெண் henpeck husbandஐத் தேர்வு செய்வது, மனைவியின் Extra marital affairsஐ குழந்தைகளுக்காக கணவன் கண்டும் காணாமல் போவது, நைஜீரியாவில்
இருப்பவர்கள் நைஜீரிய ஒலிபரப்புகளைப் பார்க்காமல் CNN telecastஐப் பார்ப்பது என்று கதை நெடுக Adichie தெரிகிறார். Adichieன் மாஸ்டர்பீஸான Half of a Yellow Sun படிக்கப்படாமல் எனது Kindle libraryயில் பலகாலமாக இருக்கிறது.

Leave a comment