லியா எனும் டீன்ஏஜ் பெண்ணின் கோணத்தில் சொல்லப்படும் கதை. போர் நடக்கும் நாட்டில் ஒருநாள் திடீரென்று ராணுவத்தினர் வீட்டின் கதவைத் தட்டுகிறார்கள். லியாவின் அப்பா, குழந்தைகள் நால்வரையும் அழைத்துக் கொண்டு அங்கிருந்து தப்பி அடையாளம் தெரியாத தீவுக்குக் கொண்டு செல்கிறார். அம்மாவிற்கு அதிருஷ்டக்குறைவு, தப்பிக்குமுன் சுட்டுக் கொல்லப்படுகிறாள். யாருமில்லாத தீவில் குழந்தைகள் கடுமையாக வேலைசெய்ய வேண்டியிருக்கிறது. குழந்தைகள் அவர்கள் அப்பாவை விரும்பாவிட்டாலும் அவர் எல்லோரையும் காப்பாற்றுவார் என்று நம்புகிறார்கள். பத்து வருடங்கள் கழிகிறது. இப்போது ராணுவம் இவர்களைத் தேடி வந்து விட்டது. இன்னும் சிறிது நேரத்தில் குடும்பத்தில் எல்லோருமே சாகப் போகிறார்கள்……..
எது உண்மை எது மாயை என்பதை வைத்து எழுத்தாளர்கள் ஏராளமான விளையாட்டு விளையாடலாம். ஒரு முழுக்கதையில் ஒன்றைச் சொல்லி விட்டு கடைசியில் கதை U TURN எடுப்பது எப்போதும் நிகழ்வதில்லை.
திரில்லர் நாவல்களில் இது எளிது. வாசகர்களை முழுக்க ஒன்றை நம்பவைத்துப் பின் அது இல்லை என்றாக்குவது. உதாரணம் Devotion of Suspect X, Silent Patient, Woman in the Window……..
ஆனால் சிறுகதையில் Rurh Ware அதை எளிதாகச் செய்திருக்கிறார். Ruth Ware மிகவும் பாப்புலரான ஆங்கிலேய எழுத்தாளர். இவரை The Woman in Cabin 10 நாவலில் இருந்தோ அல்லது இந்தக் கதையில் இருந்தோ வாசிக்க ஆரம்பிக்கலாம். Good writing excites me, and makes life worth living.