Martha ஆங்கிலேய எழுத்தாளர். இவருடைய முதல் நாவல் Lilac girls ஒரு Holocaust story. அதன் பின்னர் உலகப்போரை மையமாக வைத்து இரண்டு நாவல்கள் எழுதியிருக்கிறார்.
Ravensbruck வதைமுகாம் பெண்களுக்காகப் பெண்களால் நடத்தப்பட்ட நாஸி வதைமுகாம். பெண்களுமே மற்றவர்களைச் சித்திரவதை செய்வதில் ஆண்களுக்குச் சளைத்தவர்கள் இல்லை என்பதை வரலாறு நிரூபணம் செய்த ஒரு இடம்.
ஆரம்பத்தில் கர்ப்பிணி யூதப்பெண்கள் குழந்தை பெற்றதும் அந்தக் குழந்தைகள் ஹிட்லரின் உத்தரவின் படி கொல்லப்பட்டன. பின்னர் இலவசமாகப் பின்னாளில் கிடைக்கப் போகும் வேலையாட்கள் என்று கொல்லாமல் விட்டனர். Fatherland பல நூற்றாண்டுகள் இருக்கும் என ஜெர்மானியர் கனவு கண்டிருப்பார்கள். இன்றும் ஜெர்மனியில் யூதவெறுப்பு போயிருக்கிறதே தவிர பிரௌன் நிறத்தினரின் மீதான வெறுப்பு போகவில்லை. ஜெர்மன் விமான நிலையங்களில் அமெரிக்க, இங்கிலாந்து பாஸ்போர்ட்டுகளுக்கும் இந்திய பாஸ்போர்ட்டுகளுக்கும் காட்டும் வித்தியாசத்தைக் கவனித்துப் பாருங்கள்.
ரொமேனிய சகோதரிகள் இருவர் ஹங்கேரிய ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டு, Ravensbruck வதைமுகாமில் அடைக்கப்படுகிறார்கள். அதில் மூத்தவள் கர்ப்பிணி. போதுமான உணவு இல்லாமை, மிக அதிக வேலைகள் இவற்றால் எடையை முற்றிலும் இழந்த அவள் கர்ப்பத்தை பெரிய ஆடையில் மறைத்துக் கொள்கிறாள். குழந்தை பிறப்பதற்கு நான்குதினங்கள் முன்பு வெள்ளிஊசியை மறைத்துக் கொண்டு சென்ற குற்றத்திற்காக நாற்பது பிரம்படிகள் பெற்று, இரண்டு நாட்கள் பட்டினியில் விடப்படுகிறாள். குழந்தைக்கு ஆயுள் கெட்டி. அவள் சித்தி எழுதிய, மறைத்து வைக்கப்பட்ட, பல கடிதங்கள் வாயிலாக அவள் நடந்தவற்றை, தான் யார் என்பதை அறிந்து கொள்கிறாள். Martha Holocaust குறித்து நாவலுக்காக ஆய்வுகள் செய்தவர், எனவே இந்த குறுநாவலின் நிகழ்வுகள் தத்ரூபமாக வருகின்றன. வதைமுகாமில் பாதிக்கப்பட்டவர்கள் மறைந்து விட்டார்கள்,
அப்போது ஒரு வயது குழந்தையாக இருந்தவர்களுக்குக் கூட வயது எண்பதை நெருங்கியிருக்கும். இன்னும் சில காலத்தில் எல்லாம் மறக்கப்பட்டு விடும், சொல்வதற்கு யாரும் இருக்க மாட்டார்கள். ஆனால் Holocaust Literature என்பது அநேகமாக எல்லாக் கொடுமைகளையும் நூல்களில் பதிந்து விட்டது. அவை எப்போதும் இருக்கும்.