கருணாதிலகா ஒரு இலங்கை எழுத்தாளர். கிரிக்கெட்டை மையமாகக் கொண்ட இவரது முதல் நாவலான China Manக்குப் பிறகு எழுதிய இந்த நாவல் புக்கர் 2022 நெடும்பட்டியலுக்குள் நுழைந்திருக்கிறது. இரண்டு நாவல்கள் மூலம் இவர் இலங்கையின் முன்னணி எழுத்தாளர்களில் ஒருவராகிறார்.

The Dirty Dust என்ற ஐரிஸ் நாவல் முழுவதுமே
கல்லறையில் இருக்கும் பிணங்கள் பேசிக்கொள்வது. இந்த நாவலில் கதைசொல்லியே பிணம் தான். அவனுடன் கொலைசெய்யப்பட்ட பலருக்கு நடுவே திடீரென விழிக்கும் அவனுக்கு தான் உயிருடன் இருக்கிறோமா அல்லது இறந்து விட்டோமா என்ற சந்தேகம் எழுகிறது. அவன்/அது மூலம் நகரப்போகும் கதையிது. எனவே Ghost story.

Second Personல் சொல்லப்படும் நாவல்கள், வாசகர்களாகிய நாம் கதைசொல்லியாக கூடுவிட்டுப் பாயவைக்கும் யுத்தி. ஒருவர் இறந்து சிலநாட்கள் இருந்த இடத்தைச் சுற்றிக் கொண்டிருப்பார் என்ற நம்பிக்கை இந்தியாவிலும் இருக்கிறது. பதினாறாவது நாள் காரியம் செய்து வழியனுப்புவது. இலங்கையில் மரணத்திற்கும் மறுஜென்மத்திற்கும் இடைப்பட்ட காலம் ஒரு வாரம், ஏழு நிலாக்கள்.

கதைசொல்லி மாலி, சிங்களத் தகப்பனுக்கும், Burgher தாய்க்கும் பிறந்தவன். சூதாடி. Gay. புகைப்படக்காரன் JVP, LTTE, ,Sri Lankan Army, Indian army, அரசாங்கம் என்று எல்லோருக்குமே வேலைசெய்யும் புகைப்படக்காரன். எண்பதுகளில் உள்நாட்டுப் போர் ஆரம்பித்த காலகட்டத்தில் ஏராளமான விஷயங்களைப் பார்த்திருக்கிறான். பலரது ரகசியங்களை புகைப்பட வடிவில் வைத்திருந்திருக்கிறான்.
மேலே குறிப்பிட்ட ஐவரில் யார் வேண்டுமானாலும் கொன்றிருக்கலாம். மாலிக்கு ஏழுநாட்கள், அவனைக் கொன்றது யார் என்று கண்டுபிடிக்க, பழிவாங்க என எல்லாவற்றிற்கும். ஆனால் அவனால் உயிருடன் இருக்கும் யாரையும் தொடவோ, ,பேசவோ முடியாது.

So இது ஒருWhodunit நாவல் தானே! Literalஆக அப்படித்தான், ஆனால் இந்த நாவல், இலங்கையின் குழப்பமான ஒரு காலகட்டத்தைப் படம்பிடிக்கும் நாவல். Political satire என்றும் சொல்லலாம். கருணாதிலகா யாரையும் விட்டு வைக்கவில்லை. ஆயுதம், ,அதிகாரம் இருக்கும் எல்லோருமே கொலை, சித்திரவதை, பெண்களை வன்புணர்வு செய்வது என்று ஈடுபடுகிறார்கள். அமைச்சர் எங்களது ஆள் ஒருவரைக் கொன்றால் நாங்கள் உங்களில் பன்னிரண்டு பேரைக் கொல்வோம் என்று வெளிப்படையாகச் சொல்கிறார். காவல்துறை லஞ்சம் மற்றும் அதிகார துஷ்பிரயோகத்தால் நிரம்பி இருக்கிறது. 2022ல் இலங்கையின் இந்த நிலைக்கான வித்து எண்பதுகளில் இடப்பட்டிருக்கிறது.

கருணாதிலகா இந்த நாவலை Satire ஆகவே எழுதியிருக்கிறார், ஆனால் வாசிக்கையில் பயம் வருகிறது. சின்னத்தீவில் பிரச்சனையைத் தீர்க்க இந்தியாவை உதவிக்கு அழைக்கிறார்கள். அமெரிக்கா போன்ற நாடுகளின் உளவாளிகள் வந்து சேர்கிறார்கள். யாரையும்,எந்தக் காரணமும் சொல்லாமலேயே கொல்லலாம் என்பதே எண்பதுகளின் நிலையாக இருந்திருக்கிறது. கொல்வதும் JVP, LTTE, IPKF, Srilankan Army என்று யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். கருணாதிலகா, வசதி படைத்தவர்கள் தப்பித்து லண்டன் போன்ற நகரங்களுக்கு செல்கிறார்கள், இல்லாதவர்கள் மனைவியை அரபுநாடுகளுக்கு அனுப்புகிறார்கள் என்று ஒரே வரியில் சொல்லிக் கடக்கிறார். நிர்வாணமாகப் பெண்ணை நிறுத்தி, மேல்சட்டை அணியாதவன் விசாரணை செய்வதைப் பார்த்துக் கொண்டே ராணுவமேஜர் எந்த எதிர்வினையும் இல்லாமல் கடந்து போகிறார். எழுபத்தி இரண்டு பிணங்களின் மிஞ்சிய பாகங்களை ஒரே இடத்தில் போட்டு எரிக்கிறார்கள். நாவலின் காலம் 1980கள், ஆனால் புக்கர் பட்டியலில் வருவதற்கு இலங்கையின் தற்போதைய நிலைமையை விட, வேறு Ideal situation இருந்திருக்க முடியாது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s