Bonnie கலிபோர்னியாவில் பிறந்தவர். காப்பிரைட்டராக, கலை இயக்குனராக தொழில்நுட்பம், மருத்துவம், கல்வி உட்பட பல துறைகளில் பணிபுரிந்தவர். இது இவருடைய முதல் நாவல். 98 Agentsகளால் Reject செய்யப்பட்ட இந்த நாவல் இப்போது முப்பத்தைந்து நாடுகளில் பதிப்பாகி எல்லா நாடுகளிலுமே Best Sellets listல் இருக்கின்றது.

அறுபதுகளில் அமெரிக்காவில் பெண்ணியக் குரல்கள் எழும்ப ஆரம்பிக்கின்றன. எழுபதுகளில் அது ஒரு இயக்கம் ஆகிறது. இந்த நாவல் ஐம்பதுகளில் ஆரம்பிக்கிறது. ஆகவே இதில் வரும் மையக்கதாபாத்திரம், ஒரு இந்தியப்பெண் எதிர்கொள்ளும் எல்லாச் சிக்கல்களையும் எதிர்கொள்கிறாள். After all you are a woman!

எலிஸபெத்தின் குழந்தைப்பருவம் துயரங்கள் நிறைந்தது. அவள் அப்பா மக்களை ஏமாற்றிப் பணம்பறித்து, கொலைவழக்கில் மாட்டிக் கொள்கிறார். அம்மா, வரிமோசடி வழக்கிற்குப் பயந்து வேறு நாட்டிற்குத் தப்பிவிடுகிறாள். ஒரே அண்ணன், ஒருபாலின உறவை அவனது அப்பா எதிர்த்ததால் தற்கொலை செய்து கொள்கிறான். ஒரு விஞ்ஞானியாக ஆவதற்கு (Chemist) இலட்சியம் கொண்ட எலிஸபெத்தை கல்லூரியில் அவளது பேராசிரியர் பாலியல் வன்முறை செய்து படிப்பைத் தொடர விடாது செய்கிறார். மிகத் திறமை வாய்ந்த எலிஸபெத், பட்டங்கள் இல்லாததால் சாதாரண Chemist ஆக வேலை செய்கிறாள்.

கால்வின் பிறந்த உடனேயே தத்துக் கொடுக்கப்படுகிறான். அவனது வளர்ப்புப் பெற்றோர் இருவருமே அவனது சிறுவயதில் இறக்கிறார்கள். அவனைப் பராமரிக்கக் கூட்டிச் சென்ற அத்தையும் சில மாதங்களில்
விபத்தில் இறக்கிறாள். சிறார் விடுதியில் கால்வின் மனரீதியாக, உடல்ரீதியாக துன்பப்படுத்தப்படுகிறான். ஆனால் அது பழைய கதை. இப்போது அவன் உலகின் பிரபலமான Chemistகளில் ஒருவன். அவனது பெயர் நோபல் பரிந்துரையில் பலமுறை வந்து விட்டது.

இவர்கள் இருவருக்குமே நண்பர்கள் கிடையாது. பழகத் தெரியாதவர்கள். Chemistryல் எவ்வளவு Geniusஒ மற்ற விஷயங்களில் சராசரிக்கும் கீழானவர்கள்.
மோதலில் ஆரம்பிக்கும் இவர்கள் உறவு தீராக்காதல் ஆகிறது. இரண்டு indifferent peopleன் காதல் எவ்வளவு தூரம் செல்லும்?
ஆனா இது காதல் கதையல்ல.

Chemistry. குடுவைகளை அடுக்கி திரவங்களைக் கலக்குவது மட்டுமல்ல Chemistry. திரையிலோ அல்லது நேரிலோ ஆண்-பெண் இருவரது உடல்மொழி ஒத்துப் போனதென்றால் அதையும் Chemistry என்கிறோம். சமையல் ஒரு Chemistry. சரியான பொருட்களின் சரியான கலவையின் சரியான கொதிநிலை. கொலை செய்யக்கூட Chemistryஐப் பயன்படுத்தலாம். பிடிக்காத கணவனுக்குப் பிரியமாக விஷக்காளான் சூப் கொடுத்து விட்டு ஒரு வருட காலத்திற்கு அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டால் போதும். ஆக Chemistry இல்லாத இடமேயில்லை.

இது பெண்ணிய நாவல். மிகவும் Funnyஆன மொழியில் (வாசிக்கையில் கணக்கில்லாமல் வாய்விட்டு சிரித்தேன்) மிகமிக சீரியஸான ஒரு விஷயத்தைச் சொல்லும் நாவல். நடுநடுவே கடவுளையும் வம்புக்கிழுக்கிறது. அறுபதுகளுக்கு முன் கடவுள் இல்லை என்று சொன்னால் கொலைமுயற்சி செய்யும் அளவிற்கு கத்தோலிக்கத் திருச்சபைகள் ஆளுமை படைத்தவையாக இருந்தன என்பது வரலாற்று உண்மை. Delia Owens எழுபது வயதில் முதல் நாவல் வெளியிட்டதைத் தொடர்ந்து Bonnie அறுபத்தைந்தாவது வயதில் முதல் நாவலை வெளியிட்டிருக்கிறார். மிகவும் புத்திசாலித்தனமான மொழியில்/ முறையில்
எழுதப்பட்ட நாவல். இந்த வருடம் பல விருதுகளின் பட்டியலில் இந்த நாவல் நிச்சயம் இடம்பெறப் போகிறது. If you are a fan of novels, Never Ever miss this novel.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s